பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது

Update: 2022-08-30 04:58 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு கடந்த 17-ந்தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக, அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் இயங்கும் 21 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்