இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறுகிற பழங்குடி மக்களின் மீதான வன்முறை தாக்குதல், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விமல், துணை செயலாளர் ராஜி, வளவனூர் நகர செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மனித உரிமைத்துறை மாவட்ட தலைவர் வேலு, துணைத்தலைவர்கள் குப்புசாமி, மகேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பெரியார், பொருளாளர் பிரின்ஸ்சோமு, செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, நகர செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் இளையரசன், செல்வக்குமார், கலைமணி, நாகப்பன், குகன், ஜெயகாந்தன், குருதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.