கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு 'சீருடை கேமரா'

கோவையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களை கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2023-10-10 18:45 GMT

கோவை


கோவையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களை கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.


சீருடை கேமராக்கள்


கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளை கோர்ட்டுக்கு விசா ரணைக்கு அழைத்துச் செல்லும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அப்போது சில கைதிகள் போலீசாரை தாக்குவது, தப்பிச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.


எனவே கைதிகளின் நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 25 போலீசாருக்கு 'சீருடை கேமரா' வழங்கும் நிகழ்ச்சி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.


கமிஷனர் ஆய்வு


துணை கமிஷனர் சந்தீஷ் முன்னிலை வகித்தார். இதில் போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 25 போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களை வழங்கி, அதன் செயல்பாடு களை ஆய்வு செய்தார்.


மேலும் பாதுகாப்பு பணிக்காக செல்லும் வாகனங்களிலும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மாநகர போலீசில் உள்ள பேரிடர் மேலாண்மை குழுவினர் வைத்திருந்த பொருட்களையும் கமிஷனர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


நடவடிக்கை கண்காணிப்பு


கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் நடவடிக்கை மற்றும் பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரின் நடவடிக்கை களை கண்காணிக்கும் வகையில் முதற்கட்டமாக 25 போலீசா ருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளது.


மேலும் கைதிகளை அழைத்துச்செல்ல பயன்படுத்தும் 12 வாக னங்களில் தற்போது 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளது. இதன் காரணமாக அனைத்தும் கண்காணிக்கப் படும். கோவை மாநகர பகுதியில் மொத்தம் 26 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சாலை தெரியும் வகையில் 15 ஆயிரம் கேமராக்கள் உள்ளன.


பேரிடர் மேலாண்மை குழு


இது குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மிக எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது. இதுதவிர ரூ.55 லட்சத்தில் 110 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

அவை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார் அடங்கிய பேரிடர் மேலாண் மை குழுவினர் தயாராக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நவீன பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்