அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை, சைக்கிள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை, சைக்கிள்களை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்

Update: 2023-07-29 19:30 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் மெய்யம்மை ஆச்சி பிச்சகுட்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சீருடை மற்றும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். முன்னதாக கண்டரமாணிக்கம் வளர்ச்சி குழு தலைவர் மணிகண்டன் வரவேற்றார். சண்முகம் ராஜமாணிக்கம், சண்முகம் ராஜரத்தினம், தி.மு.க. கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், கருப்பையா செட்டியார், வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன் முன்னிலை வகித்தனர். சுஜாதா ராஜரத்தினம் மெமோரியல் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக 50 மாணவிகளுக்கு சைக்கிள்களும், 112 மாணவிகளுக்கு சீருடை வழங்குவதற்கும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவி அளித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பொன்னாங்குடி ராமசாமி, மேக்குடி ராமச்சந்திரன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளி செயலாளர் பிச்சகுட்டி, வளர்ச்சிக் குழு செயலாளர் ஆறுமுகம், கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராமு கனகுகருப்பையா ஆகியோர் பேசினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இதில், வலையபட்டி லட்சுமணன், துபாய் லட்சுமணன், உதவி பொறியாளர் விஜயலட்சுமி, கிளை செயலாளர் ராமன், பாண்டி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரன், பிரமிளாகார்த்திகேயன், பெருமாள், வார்டு உறுப்பினர் ஷீலா தேவி, ஆசிரியை ஆனந்தி வீரமுத்து மற்றும் பெற்றோர்கள், நாட்டார் நகரத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை அமலாசெல்வமேரி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்