கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருவண்ணாமலை அருகே கல்குவாரி குட்டையில் அடையாளம் ெதரியாத ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-06-26 14:34 GMT

திருவண்ணாமலை அருகில் அடி அண்ணாமலை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்