கீழடி அருங்காட்சியகத்தை கென்யா நாட்டு மந்திரி பார்வையிட்டார்
கீழடி அருங்காட்சியகத்தை கென்யா நாட்டு மந்திரி பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.18.42 கோடி செலவில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த தொல்பொருள் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வெளி மாநிலத்தினர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கென்யா நாட்டில் இருந்து சாலை பாதுகாப்பு துறை மந்திரி நத்தன்யர் மற்றும் அரசு தலைமை செயலக அதிகாரிகள் உள்பட பலர் வந்து பார்வையிட்டனர். அதேபோல் தெலுங்கானா மாநில பொருளாதார சிறப்பு தலைமை செயலாளர் ராமகிருஷ்ணராவ் ஐ.ஏ.எஸ். தனது மனைவியுடன் வந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தொல்லியல் பிரிவு கீழடி இணை இயக்குனர் ரமேஷ் அவர்களை வரவேற்று கீழடி வரலாறு குறித்த புத்தகத்தை வழங்கினார். தொல்லியல் அலுவலர் காவ்யா தொல்பொருட்கள் பற்றி விவரமாக எடுத்துக்கூறினார்.