சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்

நாகையில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-11-10 18:45 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

நாகை - நாகூர் சாலையில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதாள சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

இந்த நிலையில் நாகையின் முக்கிய வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பெரிய கடைத்தெரு முன்பு நீலா கீழவீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும், பெரியகடைத் தெருவிற்கு செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தொற்று நோய் பரவும் அபாயம்

சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கைமூடியபடி செல்கின்றனர். இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் செல்லும் பெரிய கடைத்தெரு பகுதியில், வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்