எர்ணாகுளம் விரைவு ரெயில் பெட்டியின் அடிப்பாகத்தில் சிக்கியிருந்த டயர்

தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்த எர்ணாகுளம் விரைவு ரெயில் பெட்டியின் அடிப்பாகத்தில் சிக்கியிருந்த டயரை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-07 22:16 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்த எர்ணாகுளம் விரைவு ரெயில் பெட்டியின் அடிப்பாகத்தில் சிக்கியிருந்த டயரை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எர்ணாகுளம் விரைவு ரெயில்

கேரள மாநிலம் எர்ணாகுளம்-காரைக்கால் இடையே விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விரைவு ரெயில் கோவை, திருச்சி வழியாக தஞ்சை ரெயில் நிலையத்தை நோக்கி வந்தது. இந்த ரெயிலில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.இந்த ரெயிலில் எஸ்-10 என்ற முன்பதிவு பெட்டியின் அடிப்பாகத்தில் மோட்டார் சைக்கிள் டயர் சிக்கியபடி தண்டவாளத்தையொட்டி இழுத்து கொண்டே வந்தது. ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்தில் நின்றபிறகு முன்பதிவு பெட்டியின் அடிப்பாகத்தில் டயர் சிக்கியிருந்ததை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர். உடனே அந்த டயரை அகற்றினர். அதன்பிறகு 5 நிமிடம் தாமதமாக இந்த ரெயில் புறப்பட்டு சென்றது.

டயர் சிக்கியது எப்படி?

ரெயில் பெட்டியின் அடிப்பாகத்தில் டயர் எப்படி, எங்கே சிக்கியது என்பது உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்த டயரால் ரெயில் இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏதாவது சதி திட்டத்திற்காக இந்த டயரை யாராவது வேண்டுமென்றே தண்டவாளத்தில் வைத்து விட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தஞ்சை ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்