பள்ளப்பட்டியில் இலவச நடமாடும் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க முன்னாள் தலைவர் பாப்புலர் அபுதாஹிர் தொடங்கி வைத்தார். காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செந்தில்குமரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு சளி, இருமல், மாலை நேர காய்ச்சல், உடல் இளைத்தல், பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தவர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், பணியாளர்கள் செய்திருந்தனர்.