நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறார் டி.டி.வி. தினகரன்

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாளை டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.;

Update:2024-03-23 18:37 IST

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு திருச்சி மற்றும் தேனி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (மார்ச் 24) முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

இந்த நிலையில் அ.ம.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை டி.டி.வி. தினகரன் நாளை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தேனியில் நாளை காலை 8 மணிக்கு வேட்பாளர்களை அறிவித்து அவர் தனது பிரசாரத்தைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிட உள்ளதாக தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்