திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மடத்து குளத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 51). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாயனூர் பகுதியில் ஒரு ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பாப்பக்கா பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (23), குளித்தலையை சேர்ந்த நந்தகுமார் (22) ஆகியோர் திருமூர்த்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து திருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து, சதீஷ்குமார், நந்தகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.