திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையின் 17வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.

Update: 2022-09-03 09:27 GMT

ஈரோடு:

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

தமிழகம் கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சூரியகாந்தி பாரம் ஏற்றி சென்ற லாரி இன்று காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 17வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநர் காயம் இன்றி உயிர்த்தப்பினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் திம்பம் மலைப்பாதையில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்துனின்றன.

பின்னர் 11 மணியளவில் போக்குவரத்து சீரானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்