லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்
லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரிமளம் அடுத்துள்ள ராயவரம் பகுதியில் மரமில்லில் மரத்தூள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சிவகங்கை மாவட்டம், கண்டனூர் புதுவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் இருந்தனர். கானப்பூர் விலக்கு ரோடு அருகே வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மரத்தூள் சாலையில் சிதறியது. லாரியில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.