தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-14 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்(கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம்) இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட 467 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு தலைமை தாங்கினார். சுதந்திர போராட்ட வீரர் சிதம்பரம் உசுப்பூர் சி.ராசகோபாலனின் பேரனும், திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான நந்தகோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கும், தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த 467 தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி அவர்களின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் சுதந்திரபோராட்ட தியாகிகளின் வரலாற்று தொகுப்புகள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தேசபக்தியுடன் அனைவரும் சமம், சகோதரத்துவம், இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்