வேலூர் சிறை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

வேலூர் சிறை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Update: 2023-06-05 17:50 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவது என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டு இலக்கு 1.1 கோடி மரங்களை நடுவது ஆகும். தற்போது மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. இந்த விழாவில் வேலூர் மத்திய சிறை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் ஈஷா ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்