காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன

Update: 2022-10-10 18:45 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் தாலுகா அலுவலக வளாகம் புதர்மண்டி காட்சி அளித்தது. இதனால் அதனை சுத்தப்படுத்தி அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பழத்தோட்டம், பூந்தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அங்கு 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் நட்டு வைக்கப்பட்டன. இதற்கான பணியை தாசில்தார் சுகுமார் தலைமையில், துணை தாசில்தார் கமருதீன், வருவாய் ஆய்வாளர் மணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்