ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் பயணம் செய்ய தடை
கல்லட்டி மலைப்பாதையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுகின்றன.
நீலகிரி,
ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் அந்த பாதையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லட்டி மலைப்பாதையில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கணக்கெடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கல்லட்டி பாதையை பயன்படுத்த நீலகிரி போலீஸ் சூப்பிரண்ட் அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியினர் கலக்கமடைந்துள்ளனர். அந்த பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு வரும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுகின்றன.