வேகத்தை குறைத்து பயணிக்க வேண்டும்
விபத்தை தடுக்க வேகத்தை குறைத்து பயணிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாநகருக்கு உட்பட்ட சத்துவாச்சாரி முதல் கொணவட்டம் வரை உள்ள பகுதிகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டது.
விபத்தை தடுத்த காவல்துறையால் தேவைப்படும் இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிகார்டுகள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவே வைக்கப்பட்டுள்ளது. இது வேலூர் மாநகரில் செல்லும் வாகனங்களை பாதிக்காது. விபத்தினை தடுக்க வேகத்தை குறைத்து விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.