போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் டெப்போ முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-09-26 20:45 GMT

கோவை


அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் டெப்போ முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

காத்திருப்பு போராட்டம்

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி நேற்று கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பகலில் வெயில் கொளுத்தியதால் குடைகளை பிடித்தபடி பெண் கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்பதற்காக தலைமை அலுவலக மெயின் கதவு மூடப்பட்டது. இதனால் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த போராட்டம் குறித்து பொதுத்துறை ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறுகையில், தமிழ்நாடு முழுவ தும் போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெறுகிறது.

அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடருவோம் என்றனர். ஓய்வூதியர்கள் போராட்டம் காரணமாக மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்