திருநங்கைகள் திடீர் முற்றுகை

சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தை திருநங்கைகள் திடீர் முற்றுகை

Update: 2023-05-19 18:45 GMT

சிதம்பரம்

சிதம்பரம் அருகே உள்ள மணலூர், லால்புரம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் நேற்று சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில், சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலையில் சங்கவி என்ற திருநங்கை சென்றபோது 5-க்கும் மேற்பட்ட போலீசார் தாக்கியதால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சமூகத்தில் எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. பாதுகாப்பு தரும் காவல்துறையினரே எங்களை அவதூறாக பேசுகின்றனர். தமிழக அரசு எங்களை திருநங்கைகள் என்று அழைக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் காவல்துறையினர் எங்களை மரியாதை குறைவாக பேசுகின்றனர். நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வசித்து வருகிறோம். எங்களில் சிலர் பட்டதாரிகள் உள்ளனர். எங்களுக்கு கல்வி, இருக்க இருப்பிடம், உரிய பாதுகாப்பு வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்