டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு: கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு: கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

Update: 2023-08-02 21:44 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் வடக்குத்தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 4½ ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிர் சாகுபடி செய்திருந்தார். தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்தநிலையில் தோட்டத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறந்தது. இதனால் கரும்பு தோகையில் தீப்பற்றிக்கொண்டது. சில நிமிடங்களில் தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்