கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலந்தாய்வு மூலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 124 போலீசார் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலந்தாய்வு மூலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 124 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்து வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீஸ்காரர்கள் விருப்ப பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 96 போலீஸ்காரர்கள் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு விருப்பப்படி இடமாறுதல் செய்யப்பட்டனர். மேலும் ஆயுதப்படையில் பயிற்சி முடித்த 28 போலீசார் கள்ளக்குறிச்சி தாலுகா போலீஸ் நிலைய பணிக்கு அனுப்பப்பட்டனர். இதற்கான ஆணைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் வழங்கினார். அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜா, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், மாவட்ட தனிபிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல் அலுவலக பணியார்கள் உடனிருந்தனர்.