தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
- வேளாண்மை கமிஷனர் எல். சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- நில நிர்வாக கமிஷனர் எஸ்.நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக பொறுப்பு ஏற்பார்.மனித வள மேலாண்மை துறையில் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
- மீன்வள கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாக கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மீன் வள கமிஷனராக பதவியேற்பார். தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.
- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆர். செல்வராஜ், தமிழ்நாடு சாலை பிரிவு 2-ம் திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழிச்சாலையின் திட்ட இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக அலுவல் சாரா பொறுப்பு வகிப்பார்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.