சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் 4 அதிகாரிகள் பணி இடமாற்றம்

சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் 4 அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-10-06 23:25 GMT

சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்த 4 அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் கொள்முதல் பிரிவில் துணை மேலாளராக பணியாற்றிய செல்வகுமார், வணிக மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதே போன்று சேலம் கோட்ட மேலாளராக இருந்த அருள் முருகன், கொள்முதல் பிரிவு துணை மேலாளராகவும், உதவி மேலாளர் (பணி) பிரிவில் இருந்து மகேந்திரன் கோட்ட மேலாளராகவும், துணை மேலாளர் வணிக பிரிவில் இருந்த கலைவாணன் துணை மேலாளர் (பணி) பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இது குறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, நிர்வாக வசதிக்காக 4 பேர் மேலாண்மை அலுவலகத்திற்குள்ளேயே பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்