அரியலூர் மாவட்டத்தில் தாசில்தார் உள்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்-கலெக்டர் நடவடிக்கை

அரியலூர் மாவட்டத்தில் தாசில்தார் உள்பட 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-21 19:27 GMT

கலெக்டர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (நிலம் எடுப்பு பிரிவு) பணிபுரிந்த ஆனந்தவேல் அரியலூர் தாசில்தாராகவும், அரியலூர் தாசில்தாராக பணிபுரிந்த கண்ணன் ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை-45 தனி தாசில்தாராகவும், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை-45 தனி தாசில்தாராக பணிபுரிந்த கலிலூர் ரகுமான் உடையார்பாளையம் தாசில்தாராகவும், உடையார்பாளையம் தாசில்தாராக பணிபுரிந்த துரை அரியலூர் தேசிய நெடுஞ்சாலை-227 தனி தாசில்தாராகவும், அரியலூர் தேசிய நெடுஞ்சாலை-227 தனி தாசில்தாராக பணிபுரிந்த முத்துலட்சுமி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (நிலம் எடுப்பு), ஜெயங்கொண்டம் தனி தாசில்தாராக பணிபுரிந்த வேலுமணி செந்துறை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றம்

கலெக்டர் அலுவலக உசூர் உதவியாளராக பணிபுரிந்த செல்வம் உடையார்பாளையம் வட்ட வழங்கல் அலுவலராகவும், ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த ராஜகோபால் ஆண்டிமடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், ஆண்டிமடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணிபுரிந்த அய்யப்பன் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணிபுரிந்த பழனிவேல் அரியலூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், செந்துறை வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த பாஸ்கர் கலெக்டர் அலுவலக உசூர் தலைமை உதவியாளராகவும் (உ பிரிவு), கலெக்டர் அலுவலக உசூர் தலைமை உதவியாளராக (உ பிரிவு) பணிபுரிந்த இளவரசு செந்துறை வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்