நாமக்கல் மாவட்டத்தில்4 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

Update: 2023-01-09 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 4 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), அங்கு பணியாற்றி வந்த தேன்மொழி திருச்செங்கோட்டிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுசேமிப்பு பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த துரைசாமி, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), அங்கு பணியாற்றி வந்த சங்கர், சிறுசேமிப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்