கிராமப்புற கைவினை தொழிலாளர்களுக்கு பயிற்சி
ராகவன்பேட்டையில் கிராமப்புற கைவினை தொழிலாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
வளவனூர்,
காதி மற்றும் கதர் கிராம தொழில் ஆணையத்தின் சார்பில் எந்திரத்தை கொண்டு மண்பாண்டங்கள் மற்றும் ஊதுபத்தி தயாரிப்பது தொடர்பாக கிராமப்புற கைவினை தொழிலாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி கோலியனூர் அருகே ராகவன்பேட்டையில் உள்ள கல்வி கேந்திரா மையத்தில் 10 நாட்கள் நடைபெற்றது. இதில் பயற்சியாளர்கள் கலந்து கொண்டு கைவினை தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். .இதன் நிறைவு விழாவுக்கு காதி மற்றும் கதர் கிராம தொழில் ஆணையத்தின் இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மண்பாண்டம் தயாரிக்க பயிற்சி பெற்ற 60 பேருக்கு மின்சக்கர எந்திரங்களும், ஊதுபத்தி தயாரிக்க 20 பேருக்கு எந்திரங்களும் வழங்கப்பட்டது. விழாவில் கல்வி கேந்திரா இயக்குனர் சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.