களப்பணியாளர்களுக்கு பயிற்சி

கலைஞர் மகளிர் உரிமை திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி சப்-கலெக்டர் ஆய்வு

Update: 2023-07-23 18:45 GMT

சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை வழங்கும் திட்டத்தில், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் களப்பணியாளர்களுக்கான பயிற்சி சேத்தியாத்தோப்பு சந்திரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து விளக்கி பேசினார்.

இதில் உதவி இயக்குனர் கலைமணி, புவனகிரி தாசில்தார் சிவகுமார், சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, பேரூராட்சி செயல் அலுவலர் சீனு, கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்