புதிய ரக மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

திருக்கடையூரில் புதிய ரக மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.;

Update:2023-10-14 00:15 IST

திருக்கடையூர்:

திருக்கடையூரில் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கேரள மாநிலம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் மத்திய கிழங்கு வகை பயிர் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புதிய ரக மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு மத்திய கிழக்கு வகை பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ரமேஷ் கலந்துகொண்டு திருக்கடையூர் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு புதிய வகை காவேரி என்ற மரவள்ளி கிழங்கு சாகுபடியை அறிமுகப்படுத்தி பேசுகையில், இந்த புதிய வகை மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். தேமல் நோய் வராமல் தடுக்கும் உதவும் எனவே இப்பகுதியில் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட வேண்டும் என்று கூறினார் இதில் செம்பனார்கோவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ரமேஷ் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்