காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

Update: 2022-11-14 18:30 GMT

தோகைமலை அருகே புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இதில், வேளாண் மையத்தின் முதல் நிலை விஞ்ஞானி திரவியம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து காளான் வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பங்களை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து காளான் குடில் அமைத்தல், காளான் வளர்ப்பில் உள்ள முக்கிய வகைகள், ரகங்கள், காளான் படுக்கை தயாரிப்பு, காளான் படுக்கை பராமரிப்பு, காளான் அறுவடை செய்தல் உள்ளிட்டவை குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வேளாண் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் தமிழ்ச்செல்வி, நோயியியல் நிபுணர் தமிழ்ச்செல்வம், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்