பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே பொன்-புதுப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியை பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) நல்லநாகு பயிற்சியின் நோக்கத்தை கூறினார். பயிற்சியில் 144 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராஜன் பார்வையிட்டு, பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கி கூறினார். இதில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன், ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.