ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-10-07 18:45 GMT

தொண்டி, 

திருவாடானையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான கற்றல் கற்பித்தல் பயிற்சி முகாம் பாரதி நகர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி தொடங்கி வைத்தார். இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், 4,5 -ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என 2 கட்டமாக தலா 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் முறை குறித்தும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் பயன் குறித்தும், பள்ளியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார். பயிற்சியில் 240 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரியர் பயிற்றுநர்கள் தனலெட்சுமி, காளமேகலை, சுரேஷ், செபாஸ்டின், ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்