தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 543 தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2023-09-15 19:15 GMT
கோவை


கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 543 தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது


தேசிய மாணவர் படை


தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவிற்கான ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம் மற்றும் குடியரசு தின பயிற்சி முகாம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 70 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 543 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மேஜர் ஸ்ரீபிரியா, சுபேதார் மேஜர் நாசிப்சிங்ரானா, மாணவர் நல மைய தலைவர் மரகதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை கர்னல் பி.வி.எஸ்.ராவ் ஆய்வு செய்தார்.


துப்பாக்கி சுடும் பயிற்சி


முகாமில் மாணவ-மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, வரைபடம் மூலம் இடத்தை கண்டறிதல், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், சேவைப்பண்புகள், அணிவகுப்பு தனித்திறன் மேம்பாட்டு வகுப்பு, துப்பாக்கிகளை கையாளுதல், அதன் பாகங்களை கழற்றி மீண்டும் பொருத்துதல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


மேலும் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சிகள் மூலம் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, குழுமனப்பான்மை, தோழமை, சமூக மேம்பாடு உணர்வுகள் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


பயிற்சி நிறைவு விழாவில் வேளான் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி பேசினார். துணை அதிகாரி மேஜர் மனோன்மணி அறிக்கை வாசித்தார். முடிவில் கட்டளை அதிகாரிகர்னல் ஜோதி நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்