ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-23 19:22 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் (ஆளில்லா விமானங்கள்) பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் பருத்தி விவசாயத்தில் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது, நானோ யூரியா தெளிப்பது, ஆள் பற்றாக்குறையை சமாளிப்பது போன்ற பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். முகாமில் வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள், தனியார் உர நிறுவன அலுவலர்கள் ராஜசேகர், பரஞ்சோதி உள்பட பலர் கலந்து கொண்டு வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் பேராசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்