ஏற்காடு மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
ஏற்காடு மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம்,
ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த மழையின் காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றாலும் இன்று காலையில் சுமார் 9.30 மணியளவில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.
சேலம்-ஏற்காடு மலைப்பாதையின் 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மின்துறை ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்கள் மாற்று வழியான குப்பனூர் வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டுள்ளன.