தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
மழையால் முஷ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மூங்கில்துறைப்பட்டு,
கல்வராயன்மலை அடிவார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் முஷ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் மங்கலம் மற்றும் அருளம்பாடி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி செல்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அந்த வழியாக வருபவர்களை மாற்று வழியில் செல்லுமாறு போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.