போக்குவரத்து நெரிசலை தீர்க்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம்
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோவிலில் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோவிலில் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
பல்லடம் நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கக் கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலை தீர்க்க முறையான நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை தலைமையில் நிர்வாகிகள் பல்லடம் பொன் காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் சிலை முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது " பல்லடம் நகரில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி யால் விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பல போராட்டங்கள் நடத்திய பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக புறவழிச் சாலை திட்டத்தை அறிவித்தனர்.ஆனால் அந்த திட்டம் நிறைவேற்றப்படாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டு வருகிறது.ஆம்புலன்ஸ் வாகனங்களை கூட இயக்க முடியாத நிலைமையில்உள்ளது. இது குறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லாததால் எங்கள் கோரிக்கைகளை பல்லடம் பொங்காளி அம்மன் கோவில் உள்ள விநாயகர் பெருமானிடம் பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை நிறைவேற்றித் தர 108 தோப்புக்கரணம் போட்டு வேண்டினோம்.
கலெக்டரிடம் மனு
மேலும் வருகின்ற 18-ந் தேதி அன்று பல்லடத்திலிருந்து நடை பயணமாக சென்று திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.