சட்ட விழிப்புணர்வு முகாம்
கட்டாய கல்வி மற்றும் போக்சோ சட்டம், போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகங்கையில் நடந்தது
சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய கல்வி மற்றும் போக்சோ சட்டம், போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகங்கையில் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர் டாக்டர் நிர்மலா நிவேதா, ஆசிரியர் பயிற்றுனர் காளிராஜா, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை வழக்கறிஞர் கண்ணன், சமூக நல பாதுகாப்பு அலுவலர் சுதா உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.