விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற எண்ணெய் கப்பல் - 9 பேரை மீட்ட சக மீனவர்கள்

எண்ணெய் கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது.

Update: 2024-12-11 08:48 GMT

கன்னியாகுமரி,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு விசைப்படகில் 9 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குளச்சல் பகுதியில் இருந்து 20 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற எண்ணெய் கப்பல் விசைப்படகு மீது மோதியது. கப்பல் மோதியதில் விசைப்படகு சேதமடைந்தது. விசைப்படகு மீது மோதிய எண்ணெய் கப்பல் நிற்காமல் சென்று விட்டது.

இந்த நிலையில் விசைப்படகு கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்க தொடங்கியது. இதையடுத்து விசைப்படகில் இருந்த மீனவர்கள் 9 பேரை அந்த வழியாக சென்ற சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து அந்த விசைப்படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. கப்பல் மோதியதில் சேதமடைந்த படகு கடலில் மூழ்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்