மேட்டூர்
மேட்டூருக்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனிடையே நேற்று விடுமுறை என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூரில் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அவர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு முனியப்பனை வழிபட்டனர். தொடர்ந்து தாங்கள் சமைத்த உணவை பூங்காவிற்கு எடுத்துச் சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
சிறுவர், சிறுமிகள் விளையாட்டு சாதனங்கள் சர்க்கிள் போன்ற போன்றவற்றில் விளையாடி பொழுதை கழித்தார்கள். ஒரு சிலர் அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்று அணையின் முழு தோற்றத்தை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தன் காரணமாக முனியப்பன் கோவில் அருகில் உள்ள சிறிய ஓட்டல்கள் மற்றும் மீன் வருவல் கடைகளில் வியாபாரம் படுஜோராக நடைபெற்றது. பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.