விலைவீழ்ச்சியால் மாடுகளுக்கு தீவனமான தக்காளி

விலைவீழ்ச்சியால் மாடுகளுக்கு தீவனமான தக்காளி

Update: 2022-11-08 20:39 GMT


பொதுவாக மழைக்காலங்களில் தக்காளி செடிகளில் அழுகல் ஏற்பட்டு விலை அதிகரித்து காணப்படும். ஆனால் தற்போது மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு தினமும் டன் கணக்கில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் தக்காளிகள் அழுகியதால் அங்குள்ள சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளும் விற்காத தக்காளிகளை அங்கு கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக தக்காளிகளை மாடுகள் தங்களுக்கு தீவனமாக பயன்படுத்த தொடங்கி விட்டன. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தக்காளி மாடுகளுக்கு தீவனமாகி விட்டது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை இருப்பு வைத்து விற்க ஏதுவாக நுகர்பொருள் வணிக கிடங்குகளில் குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்