சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு!
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது
சென்னை,
கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது.
தொடர்ந்து தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்கு குறைந்து கொண்டே வந்ததால் இந்த விலை ஏற்றம் என கூறப்பட்டு வந்தது,.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது .சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் கிலோ ரூ.120க்கு விற்பனையான முதல் ரக தக்காளி, இன்று ரூ .10 உயர்ந்து, ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது .