தக்காளி விலை உயர்வு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்தது.;

Update:2023-10-09 03:00 IST
கிணத்துக்கடவில் காய்கறி சந்தை உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியில் விளையும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் பருவமழை சரிவர பொய்யாததால் தக்காளி விளைச்சல் தாமதமாக தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு மொத்தம் 10 டன் தக்காளிகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி 8ரூபாய் 60 பைசாவிற்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய் 15 பைசாவிற்கு ஏலம் போனது. இது கடந்த மாதத்தை விட ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் 55 காசு அதிகம் ஆகும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்