பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-01-03 19:45 GMT

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் செங்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 464 ரேஷன் கடைகள் முலம், 2 லட்சத்து 46 ஆயிரத்து 210 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்