தமிழகத்தில் இன்று 14 இடங்களில் சதம் அடித்த வெயில்

வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-18 17:04 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சில நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100.டிகிரி பேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக வேலூர் -107.54, திருத்தணி - 103.28 திருப்பத்தூர் - 102.56, திருச்சி - 102.38, ஈரோடு - 101.84 மீனம்பாக்கம் 101 டிகிரி பேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்