புகையிலை விற்ற கடைக்கு சீல் வைப்பு

நெல்லை மேலப்பாளையத்தில் புகையிலை விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-08-11 20:52 GMT

நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ணகுமார் என்பவரது கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. எனினும் அந்த கடையில் தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்