வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்குஅரசு சார்பில் மரியாதை

ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

Update: 2023-04-16 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

பிறந்தநாள் விழா

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கனார் 253-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்,  எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து நடந்த பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் வரவேற்று பேசினார்.

விழாவில் 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை என 30 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து44 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். அப்போது வீரன் சுந்தரலிங்கனாாின் நேரடி வாரிசு பொன்ராஜூவுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமரி சங்கர், யூனியன் தலைவர் ரமேஷ், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், பஞ்சாயத்து தலைவர்கள் ஜெம்ஸ், அருண்குமார், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், யூனியன் கவுன்சிலர் கனகரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்காந்தி, ஜெயக்கொடி, ராமசாமி, இளையராஜா, சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்