நீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்கமத்திய அரசு ஆறுகளை தேசியமயமாக்க வலியுறுத்தல்

நீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்க மத்தி அரசு ஆறுகளை தேசியமயமாக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-10-17 17:16 GMT

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு இயக்கத்தின் மாநில தலைவர் டாக்டர் ராசலிங்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடல் உறுப்புகளை கொடையாக வழங்கும் மூளைச்சாவு அடைந்தவரின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சரை இயக்கம் பாராட்டுவதோடு, அந்த தியாக குடும்பத்துக்கு நிதியுதவியோ அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியோ வழங்க வேண்டும். திருச்சி மாவட்டம் முசிறி அருகே காவிரி ஆற்றிலிருந்து துறையூர் வழியாக உபரிநீர் கால்வாய் அமைத்து பெரம்பலூர் மாவட்ட நீர் ஆதார கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே வழி, ஆறுகளை தேசிய மயம் ஆக்குவதே. இதை மத்திய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் வரை ரெயில் பாதையும், பெரம்பலூரில் மாவட்டத்திற்கு ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்