மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கஅத்திக்குன்னா-பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி மும்முரம்

பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அத்திக்குன்னா - பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-10 18:45 GMT

கூடலூர்

பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அத்திக்குன்னா - பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊருக்குள் புகுந்த வெள்ளம்

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கிய நவம்பர் மாத வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் பலத்த மழை பெய்யும் சமயத்தில் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது அகலம் குறைந்த இடங்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இதேபோல் பந்தலூர் தாலுகா அத்திகுன்னா வழியாக பொன்னானி ஆறுக்கு செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கே.கே. நகர், செட்டி வயல் பகுதியில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வரும் காலத்தில் பருவமழை பெய்யும் போதுவெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுப்பணி நீர்வளத்துறை மேற்கொண்டுள்ளது.

தூர்வாரும் பணி மும்முரம்

இதனால் ஆறுகள் மற்றும் நீரோடைகளை தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் அத்திக்குன்னா வழியாக பொன்னானி ஆற்றுக்கு செல்லும் வாய்க்கால் சுமார் 3 கி.மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட்டு வருகிறது. தொடர்ந்து அகலம் குறைவான இடங்களில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வரவுள்ள மழைக்காலத்தில் வெள்ள பாதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, அத்திக்குன்னாவில் இருந்து பொன்னானி வரை சுமார் 3 கி.மீட்டர் தூரம் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தூர்வாரப்பட்டு பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்