கொப்பரை தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும்

விலை வீழ்ச்சியை எதிர்கொள்ள கொப்பரை தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார்

Update: 2022-05-31 15:35 GMT

பொள்ளாச்சி

விலை வீழ்ச்சியை எதிர்கொள்ள கொப்பரை, தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசினார்.

சான்றிதழ் வழங்கும் விழா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த சான்றிதழ் பாடம் மற்றும் முதுநிலை பட்டய கல்வியின் சான்றிதழ் வழங்கும் விழாபொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணீதா வரவேற்றார். விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்க பாட திட்டங்க ளின் செயல்முறை பாடத்தை அதிக அளவு இணைத்து கற்போ ரை தொழில் முனைவோராக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளம் பயனாளிகளின் கருத்துகளை பரிமாற்றம் செய்யும் வகையில் மேம்படுத்தப்படும்.

மதிப்பு கூட்டு பொருட்கள்

தேங்காய், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதை எதிர்கொள்ள தேங்காய், கொப்பரையில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் வேளாண் பணிகளுக்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்காக எந்திரமாக்கல் குறித்த ஆராய்ச்சியை பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

ஒரே பயிர்களை விளைவிப்பதால் ஏற்படும் பல்முனை இடர்பாடுகளை ஈடுகட்டி வருமானத்தை அதிகரிக்க ஒருங்கி ணைந்த பண்ணைய திட்டத்தையும், பல்வேறு பயிர்களை இணைக்கும் பயிர்திட்ட அணுகுமுறையையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முதுநிலை பட்டயகல்வியியல் 37 மாணவர் களும், சான்றிதழ் படிப்பில் 93 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் தொலைதூரக் கல்வி இயக்க இணைப்பு பேராசிரியர் ராஜமாணிக்கம், வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினர் சேதுபதி, முன்னாள் மேலாண் மை குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், கிருஷ்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்